சிரியா அகதிகளுக்கு விற்கப்பட இருந்த போலியான மிதவைசட்டைகள்

0

சிரியா அகதிகளிடம் விற்கப்பட இருந்த 1200 போலி மிதவை சட்டைகளை துருக்கிய அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றியுள்ளனர். இந்த போலி மிதவை சட்டைகள் கிரீஸ் நாட்டிற்கு கடல்வழி பயணம் மேற்கொள்ள இருந்த அகதிகளிடம் விற்பதற்காக வைத்திருந்தது கண்டபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி மிதவை சட்டைகள் ஈரமானதும் கனமானதாக மாறி அதை அணிந்திருப்பவர்களை மூழ்கச் செய்து விடும். இந்த மாதம் 5 ஆம் தேதி மூன்று குழந்தைகள் உட்பட 34 பேர் படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை துருக்கி வழியாக 3000 பேர் கிரீஸ் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் 3771 பேர் ஐரோப்பாவை அடைய முயற்சித்து நீரில் மூழ்கி மரணித்துள்ளனர்.

Comments are closed.