சிரியா நாட்டு அகதிகளுக்கு ஆதரவு தர கனடா நாட்டுச் சீக்கியர்கள் முடிவு

0

கனடா நாட்டுச் சீக்கிய சமூகத்தினர் சிரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக கனடா நாட்டிற்குக்குடிபெயர்பவர்களுக்கு ஆதரவு தர முடிவெடுத்துள்ளது.
கனடாவின் வான்கோவர், பிரிட்டிஷ் கொலொம்பியா உள்ளடக்கிய பகுதிகளில் வாழும் சீக்கியர்கள் இந்த அகதிகளுக்கு வீடு,உணவு, உடை, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஆகிய உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர்.

பிறரை வரவேற்பது கானடா நாட்டு மக்களின் வாழ்வின் ஒரு பகுதி, அது இந்தியாவில் இருந்து வருபவர்களாகஇருக்கட்டும், அல்லது வேறு பகுதிகளில் இருந்து வருபர்கள் ஆகட்டும், 80 களில் சீக்கியர்கள் கனடாவில் குடி பெயர்ந்தபோது அவர்களுக்கு உணவு, இருப்பிடம், வழிபாட்டுத்தலம் கொடுத்து உதவியது கனடா.

வருகிற மாதங்களில் கிட்டத்தட்ட 2500 சிரிய அகதிகள் கனடா நாட்டிற்குக் குடிபெயர்ந்து வருவார்கள் என நம்பப்படுகிறது.

இவர்களில் 1000 குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கு இலவச கல்வி கொடுக்க கல்ஸா பள்ளி முன்வந்துள்ளது. மேலும் 2000நபர்களுக்கு இலவச உணவு, உடை மற்றும் போர்வைகள் ஆகியவற்றை வழங்கப் பல குருத்வாராக்கள் முன்வந்துள்ளன.இதனுடன் போக்குவரத்தும் மருத்துவ சேவைகளும் இலவசமாக அவளங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்ஸா பள்ளி இது குறித்து கூறுகையில் “எங்களிடம் அரபி மொழி பேசும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர். புதிதாக வரும்மாணவர்கள் தங்களது நல்வரவை உணர நாங்கள் அவர்களுக்கு எந்தச் சலுகைகளையும் செய்யத் தயாராக உள்ளோம்”என்று அந்தப் பள்ளியின் முதல்வர் கமல்பிரீத் பக்கா தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு மதநல்லிணக்க கல்விகளும்போதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

புதுவருடத்தில் கிட்டத்தட்ட 25000 சிறிய அகதிகள் கனடாவில் குடி பெயர உள்ளனர்.

Comments are closed.