சிரிய அகதிகளை உதைத்த ஹங்கேரிய பத்திரிகையாளருக்கு சிறை

0

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் பலர் அடைக்கலம் தேடி அகதிகளாக மேற்கத்தைய நாடுகளுக்குச் சென்றனர். அந்த அகதிகளில் தன் மகனை தனது தோளில் சுமந்து செல்லும் ஒசாமா என்பவரை ஹங்கேரிய பெண் பத்திரிகையாளர் தனது காலால் உதைக்கும் காட்சி செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்பபடுத்தியது. அவரது இந்த மனிதாபிமானமற்ற செயலை உலகம் முழுவதும் உள்ள பலரும் கண்டித்தனர்.

இதனை அடுத்து பெற்றா லாஸ்லோ என்ற அந்த பத்திரிகையாளரை அவர் பணிபுரிந்த செய்தி நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவரது இந்த அமைதியை குலைக்கும் செயல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் லாஸ்லோ இரண்டு வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

தன் செயல் குறித்து வலது சாரி பத்திரிகை ஒன்றிற்கு கடிதம் எழுதிய  லாஸ்லோ, அன்று நடந்த நிகழ்வுகள் குறித்து தான் பெரிதும் வருத்தப்படுவதாகவும் மேலும் தான் அச்சத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “என்னுள் ஏதோ நிகழ்ந்தது, ஒரு கையில் கேமரா இருக்க என்னை நோக்கி வருபவர்கள் யார் என்று நான் பார்க்கவில்லை. நான் தாக்கப்பட்டதை போல் உணர்ந்து என்னை பாதுகாக்கவே அவ்வாறு செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார். லாஸ்லோ அகதியான ஒசாமாவை தாக்கும் அந்த வீடியோ காட்சியில் மற்றுமொரு சிறுமியை உதைப்பதும் பதிவாகியுள்ளது.

யாவரால் தாக்கப்பட்ட ஒசாமா என்பவர் ஸ்பெயின் நாட்டில் குடியேறி தற்பொழுது அங்கு கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

ஒசாமா வின் கதை:

Comments are closed.