சிறுபான்மையின வேட்பாளரை நிறுத்துமாறு பாஜக தூது: டிடிவி தினகரன்

0

நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசுபெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.

தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை, கன்னியாகுமரியில் சிறுபான்மையினரை வேட்பாளராக நிறுத்துமாறு பாஜகவினர் நிர்ப்பந்தம் செய்ததாகக் கூறினார்.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், தங்களை தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.