சிறுமியுடன் விடுதியில் அறை எடுத்த இராணுவ மேஜர் கோகோய் கைது

0

சிறுமியுடன் விடுதியில் அறை எடுத்த இராணுவ மேஜர் கோகோய் கைது

கஷ்மீர் இளைஞர் ஒருவரை மனித கேடையமாக இராணுவ வாகனத்தில் கட்டி வைத்து ரோந்து சென்ற இராணுவ அதிகாரி மேஜர் கோகோய் கஷ்மீரில் 16 வயது சிறுமி ஒருவருடன் விடுதி ஒன்றில் அரை எடுத்து தங்க முயற்சித்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சிறுமியுடன் தங்க அறை எடுத்த விடுதி நிர்வாகிகள் சிறுமியை அவருடன் அறைக்கு அனுப்ப முடியாது என்று மறுக்கவே விடுதி நிர்வாகிகளுடன் அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு காவல்துறை வரவழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த கஷ்மீர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த சம்பவம் ஸ்ரீநகரில் இராணுவம் நடத்தும் நல்லெண்ண பள்ளிகளை இராணுவத் தளபதி பிபின் ராவத் பார்வையிட வருவதற்கு ஒரு நாள் முன்பு நடைபெற்றுள்ளது.

தற்போது, தன்னுடன் மேஜர் கோகோய் அழைத்து வந்த அந்த பெண் 16 வயது சிறுமி என்ற ஒரு தகவல் வெளியானதை அடுத்து அப்பெண்ணின் வயது குறித்த விசாரணையில் காவல்துறை இறங்கியுள்ளது.

முன்னர் சர்வதேச விதிகளுக்கு முரணாக பொதுமக்களில் ஒருவரை இராணுவ வாகனத்தில் மனித கேடையமாக கட்டி வைத்து ரோந்து சென்றதால் இவர் மீது கடும் விமர்சனம் கிளம்பியது. பின்னர் இவருக்கு பதவி உயர்வு வழங்கி பாஜக அரசு இவரை கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.