சிறைக் கொட்டடியில் கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள்

0

சிறைக் கொட்டடியில் கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள்

கடந்த 01.02.2018 அன்று தமிழக உள்துறையின் சார்பாக அரசாணை எண்: 64 வெளியிடப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்த ஆயுள் சிறைவாசிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு விடுவிப்பதற்கான விதிமுறை கொண்ட வரைவு அது. முன் விடுதலைக்குத் தகுதியான ஆயுள் கைதிகள் குறித்த தகவல்களைத் திரட்டித் தருமாறு மாநிலம் முழுவதும் உள்ள சிறைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரசாணையின் அடிப்படையில் சுமார் 1500 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. தர்மபுரி பேருந்து எரிப்பில் மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.

ஆயுள் சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை என்பது பொதுச் சமூகத்திற்கு சாதாரண செய்திதான். ஆனால், எப்போது விடுதலை கிடைக்கும் என்று தெரியாமல் அதீத மன உளைச்சலோடும், தீவிர உடல் உபாதைகளோடும் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் உழலும் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கும் அவர்களுக்காகப் போராடும் மனித உரிமையாளர்களுக்கும் -அது அநீதியின் மையிருட்டில் தென்படும் நீதியின் சிறு ஒளிக்கீற்று. பொது மன்னிப்புப் பட்டியலில் தன் கணவரின், சகோதரனின், தந்தையின், மகனின் பெயர் இருக்காதா என இந்த அறிவிப்பு முஸ்லிம் கைதிகள் குடும்பத்தினரை பரிதவிப்பில் தள்ளியுள்ளது. … <strong><span style=”color: red;”>முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener”> இங்கு செல்லவும்</a> </span></strong>

Comments are closed.