சிறையில் இருந்து வீடியோ வெளியிடும் கொலைகாரன் ஷம்புலால் ரீகர்

0

ராஜஸ்தான் மாநிலத்தில் லவ் ஜிஹாத் என்று கூறி முஸ்லிம் தொழிலாளி ஒருவரை அடித்து உயிருடன் எரித்துக் கொலை செய்த ஷம்புலால் ரீகர் உயர்பாதுகாப்புள்ள ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்து பேசும் இரண்டு வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு வீடியோக்களிலும் ரீகர் தனது வெறுப்புப் பேச்சை தொடர்ந்துள்ளார். அந்த வீடியோக்களில் தலையை மறைத்து டீஷர்ட் அணிந்து காணப்படும் அவர், ஒரு வீடியோவில் இந்துக்கள் ஜிஹாதிகளுக்கு எதிராக ஒன்று கூட வேண்டும் என்று தனது நீண்ட உரையில் கூறுகிறார். மற்றொரு வீடியோவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தான் சிறையின் பாதுகாப்பான அறையில் இருந்த போதிலும் தன்னை மேற்கு வங்கத்தை சேர்ந்த கைதிகள் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தான் அஞ்சுவதாக தனது வீடியோவில் ரீகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் செய்த குற்றத்திற்கு அவர் எவ்வித வருத்தமும் தெரிவிக்காத அவர் ஒரு வீடியோவில், “இந்து பெண்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் எனது வாழ்க்கையை அழித்துக் கொண்டேன். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் என்னையும் அந்தப்பெண்ணையும் தொடர்பு படுத்தி ஊடகங்கள் மற்றும் சட்டம் கூறுவது எனக்கு வருத்தமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் சிறுமி ஒருவருடன் நெருக்கமாக முயற்சித்து அவரது முயற்சி தோல்வியடைந்தது என்றும் அதனால் கூட ரீகர் இபப்டி ஒரு கொடுமையாக கொலையை செய்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின.

தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோக்கள் செல்போனில் பதிவு செய்யப்பட்டவை என்று தெரிகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து தகவல்கள் எதுவும் இல்லை என்ற போதிலும் கொலைகாரன் ரீகர் உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து தனது இந்த கருத்தை செல்போனில் பதிவு செய்துள்ளார் என்றால் சிறை பாதுகாப்பு குறித்த கேள்விகள் பலவற்றை அது எழுப்புகிறது. தற்போது இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது வரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்த செல்போன்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளிடத்தில் அது தனது போன் இல்லை என்று ரீகர் தெரிவித்துள்ளார். ஆனால் அது யாருடைய தொலைபேசி என்பது குறித்த தகவல் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அந்த சிறையில் 2g ஜாமர்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதுவும் அசாராம் பாபு இருக்கும் பகுதியில் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இலவசமாக  4G  சிம் கார்டுகளும், சில ஆயிரங்களுக்கு 4g தொலைபேசிகளுக்கும் கிடைக்கும் இந்த காலகட்டத்தில் 2g ஜாமர்கள் மட்டும் எத்தகைய பாதுகாப்பை வழங்கும் என்பது கேள்விக்குறி.

தன்னம்பிக்கையற்று வீட்டினுள்ளே முடங்கி கிடப்பவறான ரீகர் இந்துத்வா கும்பல் வெளியிடும் போலிச் செய்திகள் மற்றும் போலி வீடியோக்களுக்கு அடிமையாகி இருந்தார் என்று காவல்துறை தெரிவித்தது. அத்தகைய பல செய்திகள் மற்றும் வீடியோக்களை ஏறத்தாழ பாஜகவின் அனைத்து முக்கிய பிரமுகர்களும் சமூக வலைதளங்களில் பரப்புபவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் வெளியாகியவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.