“சிறையில் நான் தாக்கப்பட்டேன்” – நீதிமன்றத்தில் முகிலன் பரபரப்பு புகார்..!

0

கரூர் கோர்ட்டில் ஆஜர்பட்ட சமூக ஆர்வலர் முகிலன், தன்னை சிறையில் தாக்கியதாக பரபரப்பு புகாரை  தெரிவித்தார்.

மனித உரிமை  மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன், பிப்ரவரி மாதம் மதுரை செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த சிசிடிவி பதிவுகள் உள்ளன. அதன் பின்னர் அவர் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் திருப்பதி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டார்.

இதற்கிடையே முகிலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி அவருடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட பெண் ஒருவர் குளித்தலை  மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகார் தொடர்பான வழக்கு, கரூர் சிபிசிஐடி போலீசாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போய் கண்டு பிடிக்கப்பட்ட முகிலனை கரூர் சிபிசிஐடி போலீசார், கற்பழிப்பு வழக்கில் கைது செய்து 9-ஆம் தேதி நள்ளிரவில் கரூர் நீதிபதி முன்பு ஆஜர்பட்ட பின், 24ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே முகிலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்ட சிபிசிஐடி போலீசார்,  கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதனியடையே திருச்சி மத்திய சிறையிலிருந்து போலீசார், வேனில் கரூர் நீதிமன்றத்ததிற்கு நேற்று மதியம் முகிலனை அழைத்து வந்தனர். அப்போது வேனில் இருந்து கீழே இறங்கிய அவர், போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  முகிலன், சிறையில் தான் தாக்கப்பட்டதாக பரபரப்பு புகார்  தெரிவித்தார். மேலும் எனது வக்கீலிடம் கலந்து ஆலோசிக்க அனுமதி கொடுக்காமலேயே காவலில் எடுக்க, கொண்டு வந்து விட்டனர் என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.

பின்னர் அது பற்றிய விவரங்களை எழுத்துப்பூர்வமாக எழுதி தருமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில், கோர்ட்டிலேயே அது தொடர்பாக மனுக்கள் எழுதி நீதிபதியிடம் முகிலன் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து முகிலனை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான வழக்கினை நாளை  ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். 

Comments are closed.