சிலேட் பக்கங்கள்

0

-நூருத்தீன்

அன்று ஞாயிற்றுக்கிழமை. முஸ்தபாவைச் சந்திக்க அவருடைய நண்பர் காசிம் வந்திருந்தார். இருவரும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பிள்ளைகள் கரீமுக்கும் ஸாலிஹாவுக்கும் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அவர்களும் அன்று வீட்டில் இருந்தனர். அங்கிள் காசிமுக்கு ஸலாம் தெரிவித்துவிட்டு தங்கள் அறையில் அமர்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஹாலில் பெரியவர்கள் இருவரும் பேசுவதும் அவர்கள் காதில் விழுந்தது.

‘அஸ்ஸுஃப்பா’ என்றொரு பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்தார் காசிம். பெற்றோர் இன்றி ஆதரவு இல்லாத சிறுவர்களுக்கான பள்ளிக்கூடம். அங்கு அவர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாய் கல்வி கற்றுத் தந்தார். அதைப் பற்றி முஸ்தபாவிடம் விவரித்துச் சொன்னார் காசிம். அதற்காக நன்கொடை திரட்ட வந்திருந்தார்.

‘ஸாலிஹா! உம்மாவிடம் என் செக் புக் வாங்கிட்டு வா’ என்று குரல் கொடுத்தார் முஸ்தபா.

‘இதோ வருகிறேன் டாடி’ என்று அதைக் கொண்டு வந்து அத்தாவிடம் தந்தாள் ஸாலிஹா. காசிமிடம் திரும்பி, ‘அங்கிள்! எனக்கும் அஸ்ஸுஃப்பா பற்றித் தெரியும்’ என்றாள்.

‘அப்படியா!’ என்று ஆச்சரியமடைந்த காசிம், ‘உனக்கு என்ன தெரியும்னு சொல்லு… கேட்போம்’ என்றார்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.