சிவில் சேவை தேர்வுகளில் வெற்றி பெற்ற 50 முஸ்லிம்கள். 10 வது இடம் பிடித்த கஷ்மீரி மாணவன்.

0

மத்திய சிவில் தேர்வுக்கான இறுதி பட்டியலில் மொத்தம் தேர்ச்சி பெற்ற 1099 நபர்களில் 50 முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் கஷ்மீரைச் சேர்ந்த பிலால் மொஹியுத்தின் பட் மதிப்பெண் தர வரிசையில் பத்தாவது இடம் பிடித்துள்ளார்.  கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வருடமும் ஒரு பெண் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

பிலாலுடன் மேலும் ஒன்பது முஸ்லிம்கள் முதல் 100 இடத்தில் இடம்பெற்றுள்ளனர். முதல் 50 பேர் பட்டியலில் 22 வது இடத்தில் முசம்மில் கான், 25 வது இடத்தில் ஷேக் தன்வீர் ஆசிஃப், 28 வது இடத்தில் ஹம்னா மரியம், 39 வது இடத்தில் ஜாஃபர் இக்பால், மற்றும் 48 வது இடத்தில் ரிஸ்வான் பாஷா ஷேக் என்பவரும் இடம் பிடித்துள்ளனர். முதல் 500 இடங்களில் மொத்தம் 17 முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர். இவ்வருடம் இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் IFS, IAS, IPS மற்றும் பல அரசு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இத்தேர்வில் 36 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றனர். இது 2015 இல் 38  ஆகவும், 2014 இல் 34 ஆகவும் 2013 இல் 30 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13.4% முஸ்லிகள் இருந்த போதும் அவர்கள் உயர் அரசுப் பதவிகளில் கல்வியின்மையாலும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தினாலும் மிகக் குறைவான அளவிலேயே பங்களிப்பு செய்து வந்தனர். இவர்கள் சிவில் பணிகளில் வெறும் 2%  மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.