சிவே சேனா குண்டர்களுக்கு எதிராக முஸ்லிம்களுடன் அணிதிரண்ட, சீக்கியர் மற்றும் தலித்கள்

0

பஞ்சாப் மாநிலம் பக்வாரா பகுதியில் கடந்த புதன் கிழமை கஷ்மீரில் அமர்நாத் கோவில் யாத்திரிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று கூறி சிவ சேனா கும்பல்மு ஒன்று முஸ்லிம்களின் கடைகளை வலுக்கட்டாயமாக அடைத்து அராஜகம் செய்து வந்தது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் அராஜககாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் அரசு நிர்வாகத்திடம் மனு அளிக்கச் செல்வதாக திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பள்ளிவாசல் முன்னர் கூடிய சிவ சேனா கும்பல் பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களையும், பாரத் மாதா ஜெய் என்றும் மற்றும் பல ஆபாச கோஷங்களையும் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை தொந்தரவு செய்துள்ளது.

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கல்லெறி சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.அருகில் இருந்த கோவில் மற்றும் கட்டடங்களில் இருந்து சிவசேனா கும்பல் கலேரிந்ததில் இரண்டு போலீசார் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்தும் காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிவாசல் முன்பு இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை கண்ட அப்பகுதி சீக்கிய மக்கள் முஸ்லிம்களுடன் கைகோர்த்து கலவரக்கார கும்பலை விரட்டியடித்துள்ளனர்.

தங்களுக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று கூடுவதை கண்ட சிவ சேனா கும்பல் அங்கிருந்து தப்பியோடி கோவில்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அங்கிருந்தும் அவர்கள் தலித் சமூக மக்களால் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து சிவ சேனா தலைவர்களான இந்திரஜித் கர்வால், குல்தீப் தானி, கர்வால், மற்றும் ஹிந்து சுரக்ஷா சமிதி தலைவர் தீபக் பரத்வாஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Comments are closed.