சி.ஏ.ஏ சியோனிச சட்டத்தின் நகல்!

0

சி. ஏ. ஏ. சியோனிச சட்டத்தின் நகல்!

நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அதிகமாக சுற்றுப்பயணம் செய்த நாடு இஸ்ரேல். அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமரும் மோடி ஆவார். 2017ல் மோடி இஸ்ரேலுக்கு சென்றதை, நெதன்யாகு மோடி லவ் ஃபெஸ்ட் என்று சர்வதேச ஊடகங்கள் வர்ணித்தன. இந்த சந்திப்பின்போது நெதன்யாகு உதிர்த்த ஒரு வாக்கியம் இன்று நினைவுக்கூரத்தக்கது. ÔÔஇந்த உறவு சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது” என்று அவர் கூறினார். சுவர்க்கம் என்பது ஒரு ராஜதந்திர வார்த்தை அல்ல. அது நம்பிக்கை ரீதியான, குறைந்தபட்சம் மதரீதியான ஒரு கோட்பாடு ஆகும்.

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்ட அலை வீசும்போது இந்த வார்த்தை எவ்வளவுதூரம் கொடியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சங்பரிவார் இந்தியாவிலும், சியோனிஸ்டுகள் உலகம் முழுவதும் பரப்புரை செய்ய முயற்சிக்கும் ஒரு கொள்கையின் எதிரொலியே இந்த வாக்கியம். இந்துக்களுக்கு ஒரேயொரு நாடு மட்டுமே உள்ளது. அது இந்தியாவாகும். மதரீதியான பிரிவினையின் பின்னரே பாகிஸ்தான் உருவானது. புதியதாக உருவானது முஸ்லிம் நாடு என்றால் இந்தியா இந்து நாடாகும். இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. அவர்கள் பொறுப்புணர்வு இல்லாத அணுசக்தி நாடாக இருப்பதால் இந்தியா முள்ளின் முனையில் நிற்கிறது. அதாவது இந்தியா ஒரு பாதிக்கப்பட்ட நாடு. அதற்கான தீர்வு இந்துமயமாக்கலே. முஸ்லிம்களை விரட்டியடிக்க வேண்டும்.” இதுதான் சங்பரிவாரின் கொள்கை. ஹெட்கேவரும், சாவர்க்கரும், கோல்வால்கரும் இந்த கருத்தையே பரப்புரை செய்தனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.