சி.ஏ.ஏ.வை புறக்கணிப்போம்! தேசத்தை பாதுகாப்போம்!!

0

சி.ஏ.ஏ.வை புறக்கணிப்போம்! தேசத்தை பாதுகாப்போம்!!

டிசம்பர் மாத குளிரிலும் இந்தியா மக்களின் கோப மூச்சுக் காற்றால் அனல் தெறிக்கிறது. டெல்லி துவங்கி நாட்டின் அனைத்து மாநில மக்களும் தங்களின் எதிர்ப்பை தைரியமாக வீதிக்கு வந்து தெரிவித்து வருகின்றனர்.

ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டம் புரட்சியின் வித்தாக தூவப்பட்டு, அது அனைத்து கல்லூரி வளாகங்களிலும் படர்ந்து விண்ணை பிளக்கும் கோஷங்கள் வீதிவரை ஒலிக்கின்றது. மாணவர்களின் முழக்கங்களின் சத்தம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் சங்கிகளின் செவியை செவிடாக்கி விடுமோ என்ற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த உஷ்ணத்திற்கு காரணம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்படும் என்ற அறிவிப்பும்.

டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மை ஆதரவோடு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மறுதினமே (டிசம்பர் 12)  குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின் சட்டமாக உருப்பெற்றது.

நிறைவேற்றபட்ட குடியுரிமை திருத்த சட்டம் தெளிவான மத பாகுபாட்டை கொண்டுள்ளதும் மதச்சார்பற்ற கொள்கைக்கு முரணாக உள்ளதும் நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இரண்டாம் முறை அதிகாரத்திற்கு வந்துள்ள பா.ஜ.க.வின் இந்த ஐந்தாண்டு ஆட்சி அமித் ஷாவிற்கானது. ஆட்சிக்கு வந்த உடன் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மக்கள் விரோத, சிறுபான்மை விரோத சட்டங்களான என்.ஐ.ஏ. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.