சீனாவில் அரபு மொழி வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு!

0

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அனைத்து ஹலால் உணவகங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழி வாசகங்கள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை நீக்க வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் 2 கோடி இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் உணவகங்கள் மற்றும் உணவு சப்ளை செய்யும் ஆப்களில் அரபு மொழி வார்த்தைகளும், சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் ஹாலால் உணவகங்களில் அரபு மொழி எழுத்துக்கள் மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சீனாவில் வாழும் இஸ்லாமியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரபு மொழி அந்நிய மொழி, அந்நிய கலாச்சாரம். சீன கலாச்சாரம் தாழ்த்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றனர்.

இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களுக்கும் இதே போன்ற கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. மற்ற மதங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சீனர்கள் ஒடுக்கப்படுவதாகவும், சீன கலாச்சாரம் மறைக்கப்பட்டு வருவதாகவும் அரசு கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.