சுனில் ஜோஷி கொலை வழக்கு: எட்டு நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு

0

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட எட்டு நபர்கள் மீது மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளின் முக்கிய புள்ளியான சுனில் ஜோஷி டிசம்பர் 29, 2007 அன்று கொலை செய்யப்பட்டான். சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஜோஷியின் பெயரை தேசிய புலனாய்வு குழுமமான என்.ஐ.ஏ. குறிப்பிட்டுள்ளது.
குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் பெயர்களை ஜோஷி வெளியே கூறிவிடுவான் என்று பயந்த ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் அவனை கொலை செய்தனர். தற்போது இந்த வழக்கில் சாத்வி பிரக்யா சிங், வாசுதேவ் பார்மர், ஆன்ந்த் ராஜ் கட்டாரியா, ஹர்ஷத் சோலன்கி, லோகேஷ் சர்மா, ராஜேந்திர சௌத்ரி, ராம் சந்திர பட்டேல் மற்றும் ஜிதேந்திர சர்மா ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜோஷியின் கொலை வழக்கை முதலில் மூடிய மத்திய பிரதேச காவல்துறை தற்போது அதன் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது.

Comments are closed.