சுமத்தப்படுவது குற்றச்சாட்டுகள் அல்ல; அவதூறுகளே!

0

சுமத்தப்படுவது குற்றச்சாட்டுகள் அல்ல; அவதூறுகளே! பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17ஆம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடைப்பிடித்து வருகிறது. இவ்வருடமும் இத்தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் புதிய விடியலுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டி…

விடியல்: வருடம் தோறும் பிப்ரவரி 17ல் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொண்டாடப்படுவது ஏன்?

ஜின்னா:- கேரளத்தில் செயல்பட்டு வந்த நேஷனல் டெவலெப்மெண்ட் ஃப்ரண்ட் (என்.டி.எஃப்.), தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த மனித நீதிப் பாசறை (எம்.என்.பி.), கர்நாடகாவில் செயல்பட்டு வந்த கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிட்டி (கே.எஃப்.டி.)ஆகிய மூன்று சமூக இயக்கங்களும் ஒன்று சேர்ந்து, ஒரு குடையின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் என்ற பேரியக்கமாக ஸ்தாபிக்கப்பட்ட தினம்தான் பிப்ரவரி 17, 2007. அன்று பெங்களூர் மாநகரின், புகழ்பெற்ற பேலஸ் மைதானத்தில் எம்பவர் இந்தியா கான்ஃபரன்ஸ் என்ற வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்டது. எனவே வருடம் தோறும் பிப்ரவரி 17ல் 18 மாநிலங்களில் அணி வகுப்புகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கொடியேற்றங்கள், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தல் என்று பல வகையான நிகழ்ச்சிகள் மக்கள் ஆதரவோடு மிக்க எழுச்சியோடு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், ஓசூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் ஒற்றுமை அணிவகுப்புடன் மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட தின நிகழ்ச்சிகள் வெறுமனே ஒரு சம்பிரதாய கொண்டாட்டமாக இருப்பதில்லை. மாறாக மக்களுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வையும், நம்பிக்கையையும், தைரியத்தையும் நீதிக்காகப் போராடும் ஆற்றலையும் வழங்குவதாக இருக்கின்றது. மேலும் பாப்புலர் ஃப்ரண்ட தின நிகழ்ச்சிகள் மாற்றத்திற்கான, முன்னேற்றத்திற்கான வித்தாகவும் இருக்கின்றது. இந்த வருட பாப்புலர் ஃப்ரண்ட் தின முழக்கம் “வெறுப்பு அரசியலை தோற்கடிப்போம்”என்பதாகும். இந்த முழக்கமே இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு அவசியமானது, மக்களுக்கும் நாட்டிற்கும் முக்கியத்துவமானது என்பதை பறைச்சாற்றும் என்று கருதுகின்றேன்.

விடியல்: பாப்புலர் ஃப்ரண்டின் மீது எப்பொழுதும், ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறதே, அது ஏன்? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.