சுய மரியாதையும் சுய இழிவும்

0

சுய மரியாதையும் சுய இழிவும்

“அல்லாஹ் (இருவரை) உதாரணமாக கூறுகிறான்: பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார்; அவருக்கு நாம் நம்மிடத்திலிருந்து நல்ல வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கின்றோம். அவர், அதிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார். (கூறுங்கள்!) இவ்விருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! ஆனால் (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை…” (அல்குர்ஆன் 16:75)

உலக வாழ்வில் அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலை பெற்றவனுக்கும் பெறாதவனுக்கும் இடையேயான வேறுபாட்டை அல்லாஹ் இந்த வசனத்தில் விளக்குகிறான். அல்லாஹ்வை சார்ந்து வாழாதவனுக்கு மனிதர்களை சார்ந்து வாழும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பிறருடைய கட்டுப்பாடு மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் அவனது வாழ்க்கை கழிகிறது. சுதந்திரமில்லாத அடிமையைப்போல பிறரை சார்ந்து வாழாமல் அவனால் முன்னோக்கிச் செல்ல இயலாது.

ஆனால், அல்லாஹ்வை சார்ந்து வாழ்பவன் இதர அடிமைத்தனங்களிலிருந்து சுதந்திரமடைகிறான். அவனுக்கு முன்னால் எந்தவிதமான தடைகளும் கிடையாது. அவன் வாழ்வாதாரத்திற்காக சுயமாக உழைக்கிறான். தன்னிறைவுப் பெற்றவனாக சமூகத்தில் ஏழைகளுக்காக ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தனது செல்வத்தை செலவழிக்கிறான்.

பிறரை சார்ந்து வாழ்பவன் அவர்களிடமிருந்து தனக்கு கிடைப்பதை எதிர்பார்த்தும், குறைவான தனது உரிமைகளை குறித்தும் சிந்தித்துக் கொண்டுமிருப்பான்.

தன்னிறைவுப் பெற்றவனோ தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதைவிட பிறருக்கு தன்னால் எவ்வளவு உதவ முடியும் என்பதைக் குறித்து சிந்திப்பான்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையைவிடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.” (நூல்:புகாரி)

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Leave A Reply