சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் பலர் பலி!

0

சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பசீர். அவருக்கு எதிராக சூடான் நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்.

இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மூன்று ஆண்டுகளுக்குள் ஜனநாயக முறையில் புதிய ஆட்சி பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என ராணுவம் அறிவித்தது.  ஆனால் அநாட்டு மக்கள், மக்களாட்சி வேண்டி போராட்டங்களில் மீண்டும் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவத்திற்க்கு எதிராக போராட்டத்தில் நடத்தினர்.

கடந்த மாதம் 3ஆம் தேதி தலைநகர் கார்டூமில் போராட் டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், நாட்டில் உடனடியாக மக்களாட்சியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கார்டூம் மற்றும் ஒம்டார்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலமான போராட்டத்தை நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்களை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடிக்க முயற்சித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது ராணுவவீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் சுமார் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

Comments are closed.