சூடானில் வசந்தம் வீசுமா?

0

சூடானில் வசந்தம் வீசுமா?

எளிய மக்களின் உணவான ரொட்டியின் விலை ஒரு சூடானிய பவுண்டில் இருந்து மூன்று சூடானிய பவுண்ட்களாக உயர்ந்தது சூடானில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடும் பண நெருக்கடியும் அதிகரிக்கும் பண வீக்கமும் டாலருக்கு நிகரான சூடான் பவுண்டின் விலை சரிந்து வருவதும் சேர்ந்துகொள்ள மக்கள் அலை அலையாக வீதிக்கு வந்து போராடத் தொடங்கினர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய போராட்டம், 1989 இல் இருந்து நாட்டின் அதிபராக இருக்கும் உமர் அல் பஷீர் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையை நோக்கி திரும்பியுள்ளது. பண தட்டுப்பாடு அதிகரித்து மக்கள் தங்களின் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாத நிலையில், முன் பணம் கட்டினால்தான் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை கூட பெற முடியும் என்ற நிலைப்பாடு மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.

‘அதிபர் பதவியை விட்டு விலக வேண்டும்’ என்ற மக்களின் கோஷம் 2011இல் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய அரபுலக வசந்தத்தில் மக்கள் முன் வைத்த கோஷத்தை எதிரொலிப்பதாக இருக்கின்றது. போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டு காலம் நாட்டை விட்டு வெளியே இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சாதிக் அல் மஹ்தி சூடானுக்கு திரும்பியுள்ளது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 1989ல் இவரின் ஆட்சிதான் இராணுவப் புரட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உமர் அல் பஷீர் நாட்டின் அதிபராக பதவியேற்றார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதிக் மஹ்தி ஆட்சியை அப்புறப்படுத்துவதில் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரான ஹஸன் அல் துராபி முக்கிய பங்கு வகித்தார். இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவராக செயல்பட்ட ஹஸன் துராபி பின்னாட்களில் அந்த அமைப்பிலிருந்து வெளியேறி தனியாக ஒரு இஸ்லாமிய இயக்கத்தை நடத்தி வந்தார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இராணுவ புரட்சி மூலம் நீக்கியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் துராபி. ஆனால் மார்ச் 2016 இல் மரணித்த துராபி, மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆட்சியை புரட்சி மூலம் நீக்கியதற்கான காரணங்களை வெளியிட்டார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.