சென்னை வன்னாரபேட்டையில் காவல்துறை ஆய்வாளர் செல்லப்பா அராஜகம்

0

சென்னை வண்ணாரபேட்டை பகுதியை சேர்ந்த ரத்தினம் அண்ணாச்சி என்பவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளராக இருந்துவருகின்றார். இவரது ட்ரைசைக்கிள் மூன்று நாட்களாக காணவில்லை. இது குறித்து அவர் வண்ணாரபேட்டை H6 காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கு தினமும் காவல் நிலையம் சென்று விசாரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தன் புகாரின் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய சுமார் ஒன்பது மணியளவில் காவல் நிலையம் சென்ற அவரை அங்குள்ள காவல் ஆய்வாளர் செல்லப்பா மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். மேலும் ரத்தினம் அண்ணாச்சி அவர்களின் வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் முன்னணி என்கிற அமைப்பின் போர்டை இவர் கிழித்ததாகவும் அந்த அமைப்பை சேர்ந்தவர்களை மிரட்டியதாகவும் கூறி இவரை குற்றம் சாட்டியும் உள்ளார்.

இச்சமயத்தில் ரத்தினம் அண்ணாச்சியுடன் இருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், ராயபுரம் தொகுதி தலைவர் கோல்ட் ரபி, ராயபுரம் தொகுதி துணை தலைவர் ஆரிஃபுல்லா ஆகியோர் ஆய்வாளர் செல்லப்பாவிடம் அவர் கூறிய சம்பவங்களுக்கும் ரத்தினம் அண்ணாச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நாகரீகமற்ற முறையில் பேசவேண்டாம் என்றும் கண்ணியமான முறையில் பேசுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு தான் அவ்வாறுதான் பேசுவேன் என்றும் அவர்கள் அனைவரையும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதற்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தாரளமாக கைது செய்யுங்கள் என்று கூறவே “துலுக்க பயலுங்க கூட நீங்க எல்லாம் சேந்துகிடீன்களா” என்று கூறி மீண்டும் தரக்குறைவாக பேசி அவர்களை வெளியே தள்ளியுள்ளார்.

இதனை அடுத்து இச்சம்பவத்திற்கு நீதி கேட்க அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் காவல் நிலையம் முன்னர் திரண்டுள்ளனர்.காவல்துறை ஆய்வாளரின் இத்தகைய அடாவடித்தனத்தை எதிர்த்து காவல் ஆய்வாளர் மேல் புகார் கொடுத்துள்ளனர். காவல்நிலையத்தில் புகார் ரசீதை இன்று காலை 11 மணிக்கு தருவதாக கூறியுள்ளனர். அப்படி காவல் ஆய்வாளர் செல்லப்பா மீது கொடுக்கப்பட்ட புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனில் காவல் நிலைய முற்றுகை போராற்றம் நடத்துவோம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.