செப்-19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் முத்தலாக் தடை சட்டம்..!

0

முத்தலாக் தடை சட்டம் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு சமீபத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. முதலில் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இந்த மசோதா வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு முன்னரே பல மசோதாக்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு  இன்னும் கையெழுத்திடாத நிலையில், அதன் பிறகு வந்த முத்தலாக் தடை சட்டத்தை அவசர அவசரமாக ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.