சைபர் பாதுகாப்பும் உளவு பார்த்தலும் யார் இந்த பிக்பாஸ்…?

0

சைபர் பாதுகாப்பும் உளவு பார்த்தலும் யார் இந்த பிக்பாஸ்…?

பிக்பாஸ் வீடு, அண்டை வீடானது

பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் தமிழில் துவங்கியுள்ளது. நமது நாட்டில் பல பிரச்சனைகள் கனன்று எரிந்து கொண்டிருந்தாலும், சிலரின் கவனத்தை பிக்பாஸ் தன் வசம் ஈர்ப்பதற்கு தவறவில்லை. இதில் ஆச்சர்யம் என்னவெனில், அண்டை வீட்டில் உள்ளவர்களின் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் கூட, பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரச்சனைகளை அறிந்து வைத்துள்ளனர். அவர்களுக்காக கவலையும் அடைகின்றனர். இப்படி ஒரு டிவி நிகழ்ச்சி கடந்த பதினான்கு ஆண்டுகளாக, இந்திய சமூகத்தில் ஏற்படுத்தி வரும் மோசமான தாக்கத்தையும், அதன் பின் விளைவுகளும் நம்மை எதை நோக்கி அழைத்துச் செல்கின்றது என்பதையும் மீளாய்வு செய்ய வேண்டிய தருணமிது.

இந்நிகழ்ச்சி முதன்முதலாக இந்தி மொழியில் துவங்கியது என்றாலும், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி என ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. சர்வதேசளவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ரசிகைகளை இந்நிகழ்ச்சி கொண்டுள்ளது எனில் அது மிகையில்லை. கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தது போல கண்காணிப்பு கலாச்சாரத்திற்கு பழக்கப்படுத்த ஜனரஞ்சக ரீதியிலான பெரும் முயற்சி திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அதனை விரிவாகவும் பின்னணியோடும் நாம் பார்பது அவசியமாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.