சைபர் பாதுகாப்பும், மக்கள் கண்காணிப்புகளும் – 1

0

சைபர் பாதுகாப்பும், மக்கள் கண்காணிப்புகளும் – 1

கொரானா வைரஸ் தாக்கத்தால் மாறி வரும் வாழ்க்கை முறை

இருமுகம் கொண்ட இணையதளம் :

மொபைல் போன் வந்த பிறகு உலகம் கையளவில் சுருங்கிவிட்டது என பலர் கூற நாம் கேட்டிருப்போம். இது உண்மைதான். பல மணி நேர வேலைகள் மொபைல் போன் கையில் கிடைத்தவுடன்  சில நிமிடத்தில் முடிந்து விடுகின்றது. இதன் மூலம் பல துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக தகவல் பரிமாற்றங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, இது வரை மனித சமூகம் கண்டிராத புதிய பரிணாமத்தை இந்த தலைமுறைக்கு வழங்கியுள்ளது. நிற்க.. எப்பொழுதும் நாணயத்தின் இரு பகுதிகளை நாம் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில், இணையதளத்தின் வேறொரு பக்கத்தையும் சேர்த்தே பார்ப்போம். இவற்றின் வருகைக்கு பிறகு நமது வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தனிநபர் அந்தரங்கமும், சுதந்திரமும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றது.

இணையத்தை புறக்கணிப்போம் என்ற சாத்தியமில்லாத வாதத்தை முன்வைக்கவும் இல்லை, இணையம்தான் நமக்கு இதயம் என்று மிகைப்படுத்திவிடவுமில்லை. இந்த சமநிலை சிந்தனை அவசியமான ஒன்று என கருதுகிறேன். அதுவும் ஆன் லைன், ஆஃப் லைன் என்ற  இரு வாழ்க்கையை  வாழ வேண்டிய தற்போதைய காலத்திற்கு நடுநிலையான ஆய்வு கண்ணோட்டம் இன்றியமையாதது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.