சைவர்களுக்கு மட்டுமே தங்கப்பதக்கம்: புனே பல்கலைகழகம்

0

புனேவின் சாவித்திரிபாய் புலே புனே பல்கலைகழகத்தில் தங்கப்பதக்கம் பெரும் தகுதியாக கல்வியில் சிறந்து விழங்குவதோடு மட்டுமல்லாது சைவர்களாகவும், மது அருந்தாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று பல்கலைகழக நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாரிஷி கீர்தங்கர் ஷேளார் மாமா தங்கப்பதக்கம் பெறுவதற்காண 10 தகுதிகள் கொண்ட சுற்றறிக்கையை பல்கலைகழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும், பாரம்பரியம் ஆகியவற்றை தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் இரத்த தானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய சேவைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் விளையாட்டு மற்றும் யோகா போன்றவற்றில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கெடுத்திருக்க வேண்டும் என்பதோடு மாணவர்கள் அசைவ உணவு உண்பவர்களாக இருக்க கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக வலைதளங்களில் பல்கலைகழகத்தின் இந்த முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழவே பல்கலைகழகம் இதற்கு தங்கள் தரப்பு பதிலை வெளியிட்டுள்ளது. அதில் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் தங்கப்பதக்கங்கள் நன்கொடைகள் மூலம் வழங்கப்படுபவை என்றும் அப்படி நன்கொடை அளிக்கும் நபர்களில் ஒருவர் இது போன்ற நிபந்தனைகளை விதித்த காரணத்தால் தாங்கள் அதனை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழகத்தின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல மாணவர்கள் இந்த சுற்றறிக்கை நகலை எரித்து போராட்டம் நடத்தினர். இந்த  நிபந்தனைகள் விசித்திரமாகவும் நகைப்பிற்குரியதாகவும் இருக்கும் அதே வேலை அவை பாரபாட்சமாகவும் உள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிபந்தனைகள் ஒரு மாணவனின் கல்வித்திரனுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமற்றது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments are closed.