சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி குழந்தைகளை காத்த கோரக்பூர் கதாநாயகன் Dr.கஃபீல் கான்

0

ஆக்சிஜன் சிலிண்டர் விநியோக நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியால் கோரக்பூர் BRD மருத்துவமனைக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகளின் நிலையை உணர்ந்து தனது சொந்த முயற்ச்சியில் சொந்த பணத்தில் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி குழந்தைகளை காப்பாற்றியுள்ளார் மருத்துவர் கஃபீல் கான்.

தற்போது வரை ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 70 என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தவர்கள் கூறிய தகவலின் படி டாக்டர் கஃபில் கான் இல்லாதிருந்தால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஐ தொட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியாவதை உணர்த்தும் அவசர சமிக்ஞை ஒலி ஒலித்ததும் ஆக்சிஜன் வினியோகிஸ்தரை மருத்துவமனை அதிகாரிகள் தொடர்புகொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் கட்டண பாக்கியை செலுத்தாதவரை புதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படமாட்டாது என்று கூறவே டாக்டர் கஃபில் கான் தனக்கு பரிட்சயமான தனியார் மருத்துவமனியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை கடனாக வாங்கியுள்ளார்.

இந்த சிலிண்டர்களும் சில மணிநேரம் வரை தான் தாக்குபிடிக்கும் என்பதால் மீண்டும் தன் வாகனத்திலே வேறு பல தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை அவர் பெற்றுள்ளார். இபப்டி சுமார் 12 சிலிண்டர்களை அவர் மருத்துவமனைக்காக பெற்றுள்ளார்.

பின்னர் அப்பகுதி சிலிண்டர் வினியோகிஸ்தர் பணத்திற்கு சிலிண்டர் தர முன்வரவே அவரது பணத்தில் ரூபாய் 10000 செலவழித்து அவர் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இரவு முழுவதும் தனது வாகனத்திலேயே சுற்றித் திரிந்து டாக்டர் கஃபில் கான் எடுத்த முயற்சியினால் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாக்டர் கஃபில் கானின் இந்த முயற்சியை போற்றுவதை விடுத்து உத்தர பிரதேச அதித்யநாத் அரசு அவரை பணிநீக்கம் செய்துள்ளது. இன்னும் சமூக வலைதளங்களிலும் தங்களது பினாமி செய்தி தளங்கள் மூலமாகவும் டாக்டர் கஃபில் கான் மீது அவதூறு பரப்பி வருகிறது பாஜக ஆதரவு கும்பல். குழந்தைகளின் மரணம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்படவில்லை என்று பாஜக கூறிவரும் நிலையில் டாக்டர் கஃபில் கானின் இந்த செயல் அவர்களின் பரப்புரைக்கு எதிராக இருப்பதினால் அவரது இந்த தூய முயற்சிக்கு களங்கம் விளைவித்து குழந்தைகளின் மரணத்திலும் அரசியல் செய்கிறது பாஜக.

Comments are closed.