சொந்த செலவில் காஸாவில் 50 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்திய கத்தர் நாட்டு வர்த்தகர்!

0

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் சீர்குலைந்த காஸாவில் ஐம்பது ஜோடிகளுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.கத்தரின் பிரபல வர்த்தகரின் பண உதவியால் காஸாவில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அல்ஃபலாஹ் இத்திருமணத்திற்கு ஏற்பாடுச் செய்தது.வெள்ளிக்கிழமை மாலை மக்கள் நிரம்பிய அரங்கில் வைத்து மணமக்கள் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஐம்பது ஜோடிகளின் திருமணத்திற்கான செலவை ஏற்றுக்கொண்டவர் கத்தர் நாட்டைச் சார்ந்த வர்த்தகர் அலி பின் ஹுஸைன் ஸாதா ஆவார்.ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயீல் ஹானியா இத்திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அலி பின் ஹுஸைன் ஸாதாவின் சேவையை ஹானியா பாராட்டினார்.காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மக்களுக்கு உதவுவதற்காக துவக்கப்பட்ட அமைப்புதான் அல்ஃபலாஹ்.
காஸாவிற்கு அடிக்கடி வருகை தரும் அலி பின் ஹுஸைன் ஸாதா, அங்கு பல்வேறு திட்டங்களை துவக்கியுள்ளார்.மேலும் ஒவ்வொரு ஆண்டும் காஸாவில் 50 ஜோடிகளுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைப்பதாக ஸாதா வாக்களித்துள்ளதாக இஸ்மாயீல் ஹானியாவின் மகன் அப்து அல் ஸலாம் ஹானியா தெரிவித்தார்.2008-ஆம் ஆண்டு காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்த ’தக்வா மஸ்ஜித்’ ஸாதாவின் நிதியுதவியால் புனரமைக்கப்பட்டது.

Comments are closed.