சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: சாட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து பாம்பே உயர்நீதிமன்றம் கேள்வி

0

சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு விசாரணை குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியிடப்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த காலத்தில் அவ்வழக்கின் பெரும்பாலான சாட்சிகள் பிரழ்சாட்சிகளாக மாறினர். இந்நிலையில் இந்த சாட்சிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து பாம்பே உயர் நீதிமன்றம் CBI யிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து சிபிஐ யிடம், “சாட்சிகளுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பை நீங்கள் வழங்கினீர்கள்? இதில் பலர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர். இது தான் இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ காட்டும் அக்கறையா?” என்று நீதிபதி ரேவதி மொஹிதே தேரே கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வழக்கில் இருந்து குஜராத்தின் முன்னாள் துணை இன்ஸ்பெக்டர் ஜெனெரல் D.G.வன்சாரா, ராஜஸ்தான் IPS அதிகாரி தினேஷ் M.N. மற்றும் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொராபுதீன் ஷேக்கின் சகோதரர் ருபாபுதீன் அளித்த மனு மற்றும் ராஜஸ்தான் காவல்துறை காவலர் தல்பத் சிங் ரதோட் மற்றும் குஜராத் காவல்துறையை சேர்ந்த N.K.அமின் ஆகியோரை இவ்வழக்கில் இருந்து விடுவித்ததற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்த மனு ஆகியவற்றின் மீதான விசாரணையின் போது இந்த கேள்விகளை நீதிமன்றம் கேட்டுள்ளது.

Comments are closed.