சொஹ்ராபுதீனை யாரும் கொல்லவில்லை! குற்றவாளிகள் அனைவரும் விடுதலை!

0

-ரியாஸ்

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கில் எஞ்சியிருந்த குற்றம்சாட்டப்பட்ட 22 நபர்களையும் நிரபராதிகள் என்று விடுவித்துள்ளது. சொஹ்ராபுதீன் ஷேக், அவர் மனைவி கௌசர் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோரின் கொலைகள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டு வந்தன.

நவம்பர் 26, 2005ல் அகமதாபாத்தில் வைத்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த சொஹ்ராபுதீன் ஷேக்கை காவல்துறையினர் என்கௌண்டரில் கொலை செய்ததாக குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் டி.ஜி.வன்சாரா தெரிவித்தார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தாவூத் இப்ராஹிம் ஆகியோருடன் சொஹ்ராபுதீன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களின் உத்தரவின் பெயரிலேயே மோடியை கொலை செய்ய வந்ததாகவும் காவல்துறை மேலும் கூறியது.

மோடியை கொலை செய்ய வந்தார் என்ற குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட முதல் நபர் சொஹ்ராபுதீன் அல்ல. 2002 முதல் 2006 வரை குஜராத்தில் 20 நபர்கள் என்கௌண்டரில் கொல்லப்பட்டதாக சிட்டிஸன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு தெரிவிக்கிறது. சொஹ்ராபுதீன் சகோதரர் ருபாபுதீன் மற்றும் பத்திரிகையாளர் பிரசாந்த் தயாள் ஆகியோரின் முயற்சிகள் இல்லாமல் போயிருந்தால் இந்த வழக்கும் ஏனைய என்கௌண்டர் வழக்குகளை போல் மூடி மறைக்கப்பட்டிருக்கும்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.