சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது

0

சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு: 60வது சாட்சியும் பிறழ் சாட்சியானது

சொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் சாட்சியாக இருந்த ராஜஸ்தான் காவல்துறையின் மூத்த காவல்துறை அதிகாரி கடந்த திங்கள் கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஹதிபோல் காவல்நிலைய அதிகாரியாக பணியாற்றிய பன்வர் சிங் தற்போது மாநில காவல்துறையின் துணை கண்காணிப்பாளாராக பணியாற்றியுள்ளார். இவர் சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி குற்றம்சாட்டப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் விசாரணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர்.

தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை அளித்த அவர், தன்னை 2011 இல் சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பாக போலியான வாக்குமூலத்தை கொடுக்க வற்புறுத்தினார்கள் என்றும் தான் அவர்கள் கூறுவது போல வாக்குமூலம் கொடுக்கவில்லை என்றால், தன்னையும் அவ்வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்து கைது செய்துவிடுவதாக அவர்கள் மிரட்டியதாக சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 86 சாட்சியங்களை நீதிமன்றம் விசாரித்துள்ள இவ்வழக்கில் பிறழ் சாட்சியாக மாறும் அறுபதாவது நபர் இவர் என்பதும் இவ்வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.