சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கின் தீர்ப்பு!

0

2005ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி வகிக்கும்போதுதான் சொஹ்ராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுஸர் பீ ஆகியோரை குஜராத் காவல்துறையின் ஏ.டி.எஸ். என்ற தீவிரவாத எதிர்ப்பு பிரிவு கடத்திச் சென்றது. ஆந்திராவிலிருந்து மகாராஷ்டிராவின் சங்கிலிக்கு சொஹ்ராபுதீன் ஷேக்கும், அவரது மனைவியும் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் துளசிராம் பிரஜாபதியும் பயணித்தார். அவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார்.

சொஹ்ராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவியின் உடல் தீயில் கரிந்த நிலையில் மூன்று தினங்களுக்கு பிறகு சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு மற்றொரு என்கௌண்டரில் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் கொல்லப்பட்டார். குஜராத்தில் ஒரு பிரபல தலைவரை கொலைச் செய்ய வந்த கும்பலின் தலைவர்தான் சொஹ்ராபுதீன் ஷேக் என்று குஜராத் டி.ஐ.ஜி.யாக இருந்த டி.ஜி.வன்சாரா தலைமையிலான ஏ.டி.எஸ். அன்று கூறியது. மோடியின் பிம்பத்தை கட்டமைப்பதற்காக குஜராத் காவல்துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அன்று இத்தகைய படுகொலைகளை சர்வ சாதாரணமாக நிகழ்த்துவதற்காகவே நியமிக்கப்பட்டிருந்தது.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.