சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கில் சிபிஐயை கண்டித்த நீதிபதி வழக்கில் இருந்து மாற்றம்

0

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கை விசாரித்து வந்த  நீதிபதி ரேவதி மொஹிதே தேரே அவ்வழக்கில் இருந்து வேறு வழக்கிற்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கு விசாரணையை செய்திகளில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியவர். மேலும் சொஹ்ராபுதேன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு சாட்சியங்களில் பெரும்பான்மையானோர் பிறழ் சாட்சிகளாக மாறியதை அடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியவர். இன்னும் இந்த வழக்கு விசாரணையில் சிபிஐயின் போக்கையும் கடுமையாக விமர்சித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மொத்தம் குற்றம் சாட்டபட்ட 38 பேர்களில் இதுவரை 15 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் உள்ள 42  சாட்சியங்களில் 34 பேர் பிறழ் சாட்சியாக மாறியுள்ளனர். கடந்த பிப்ரவரி 12  ஆம் தேதி மேலும் இரண்டு சாட்சியங்கள் தங்களது வாக்குமூலத்தை மாற்றிக்கொள்ளவே சிபிஐ நீதிமன்றத்திற்கு போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிபதி ரேவதி மொஹிதே தேரே தெரிவித்தார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித அச்சமும் இல்லாமல் சாட்சியங்களை வழங்குமாரு சாட்சிகளை பாதுகாப்பது சிபிஐயின் பொறுப்பு இல்லையா? இவ்வழக்கில் இத்தனை சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதை காணும்போது நீங்கள் அவர்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு வழங்குகிறீர்களா? உங்களது பொறுப்பு வெறுமனே குற்றபப்த்திரிகை தாக்கல் செய்வதோடு முடிந்து விடுவவில்லை. சாட்சிகளை பாதுகாப்பதும் உங்களது பொறுப்பு தான்.“ என்று சிபிஐ-யை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய கேள்வியளுக்கு பதிலளிக்க சிபிஐ தரப்பில் ஆஜரான A.S.G.அணில் சிங் கூடுதல் அவகாசம் கேட்க, “நீங்கள் வெறும் அமைதியான பார்வையாளராக மற்றும் இருந்துவிட முடியாது. சிபிஐயிடம் இருந்து எனக்கு கிடைக்கவேண்டிய ஒத்துழைப்பு எனக்கு தற்போது கிடைக்கவில்லை. இது தான் உங்களது மனப்போக்காக இருதால் இந்த வழக்கு விசாரணையை நீங்கள் ஏன் நடத்த வேண்டும்?” என்றும் நீதிபதி ரேவது கேள்வி எழுப்பினார்.

இன்னும் பிப்ரவரி 22 ஆம் தேதி, மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மேலாணி, சொஹ்ராபுதீனை 2005 இல் கைது செய்த சிபிஐ, சொஹ்ராபுதீன் அவர்களிடம் இருந்து தப்ப நினைக்கையில் சுட்டுக் கொன்றதாகவும் ஆனால் அரசியல் நோக்கம் கொண்ட சிபிஐ இதனை மறைக்க போலி என்கெளண்டர் கதையை தயார் செய்துள்ளது என்று கூறினார். மேலும், “இன்றையளவில் சிபிஐ சிறப்பாக சமன் செய்யப்பட்டுள்ளதாக உள்ளது என்பதை நான் தெரிவிக்க முனைகிறேன்.” என்று மகேஷ் ஜெத்மேலாணி கூற, “ அதனால் தான் நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு தர அது மறுக்கிறதா?” என்று நீதிபதி ரேவதி பதிலுரைத்துள்ளர்.

நீதிபதி ரேவதியின் இந்த கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காத நிலையில் கடந்த திங்கள் அன்று வெளியான நீதிபதிகள் நியமன உத்தரவில் நீதிபதி ரேவதி மொஹிதே தேரே வின் மாற்றமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது  சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கில் முன்ஜாமீன் கோரி மும்பை மற்றும் தானேவில் இருந்து வரும் மனுக்களை விசாரிக்க இருந்தார். இவரின் மாற்றத்தை தொடர்ந்து இந்த மனுக்களை நீதிபதி நிதின் சாம்ப்ரே விசாரிப்பார் என்று தெரிகிறது. ஆனால் இந்த நீதிபதிகள் மாற்றம் வழமையானது தான் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments are closed.