சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை மீண்டும் ஒப்படைக்கவும்: சிபிஐ கு நீதிமன்றம்

0

ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திடமே ஒப்படைக்க சி.பி.ஐ க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த மனுவை ஏற்று சிபிஐ ஆம் ஆத்மி அலுவலகத்தில் எடுத்த ஆவணங்களை சிபிஐ திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவணங்களை திருப்பி கேட்டதோடு மட்டுமல்லாமல் தவறான ஆவணங்களை எடுத்த மற்றும் தவறாக சோதனையிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் ஆவணங்களை பறிமுதல் செய்து தங்கள் பணிகளை கெடுத்ததற்காகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரியிருந்தார்.

மேலும் தங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதே தங்கள் பணிகளை கெடுப்பதற்காகத்தான் என்றும் அவர் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

Comments are closed.