ஜனநாயகத்தைப் பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதையை கிடையாது- வைகோ!

0

நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்ற பிறகு சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். முத்தலாக் தடை சட்ட மசோதா, அணை பாதுகாப்பு சட்ட மசோதா, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் திருத்த மசோதா உள்ளிட்டவைகள் விவாதத்திற்கு வர இருப்பதாகவும், அதன் தொடர்பான விவாதத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 105 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பதவியேற்றிருக்கும் பாஜக ஜனநாயகத்தை படுகொலையை நடத்தி இருப்பதாகத் தெரிவித்தார். குதிரை பேரம் செய்து ஆட்சியை பா.ஜ.க கைப்பற்றிக் கொண்டதாக குற்றம்சாட்டினார். இந்த ஆட்சி எத்தனை நாளைக்குப் போகும் என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்றும் ஜனநாயகத்தைப் பற்றி பேசும் அருகதையை பாஜக இழந்துவிட்டது என்றார்.

Comments are closed.