ஜனவரியில் இருந்து ஹிங்கோணியா பசு பராமரிப்பு மையத்தில் 8122 பசுக்கள் இறந்துள்ளது: ராஜஸ்தான் அரசு

0

ஆசியாவில் சிறந்த பசு பராமரிப்பு அமையம் என்று கூறப்படும் ஹிங்கோணியா பசு பராமரிப்பு மையத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை 31 ஆம் தேதி வரை 8122 பசுக்கள் நலக் குறை மற்றும் காயங்களால் உயிரிழந்துள்ளன என்று ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1053 பசு மாடுகள் இங்கு உயிரிழக்கின்றன. கடந்த 10 நாட்களில் மட்டும் 500 பசுக்கள் உயிரிழந்துள்ளன.

2012 இல் 7.09 ஆக இருந்த இறப்பு விகிதம் 2016 ஜூலையில் 11.31 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அதே சமயம், மாட்டின் உணவு மற்றும் இதர பொருட்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது 2007-08 இல் 5.19 கோடியில் இருந்து 2015-16 இல் 10.78 கோடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து நான்கு நாட்களுக்குள் நிலைமையை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கென அமைச்சர்கள் பிரபு லால் சைனி , ராஜ்பால் சிங், ஷெகாவத் மற்றும் JMC மேயர் நிர்மல் நஹதா வுடன் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பசு பராமரிப்பு மையத்தில் தற்போது உள்ள நிலைக்கு காரணம் என்று கூறி துணை கமிஷனர் சேர் சிங் லுஹாரியா மற்றும் அந்த பசு பராமரிப்பு சாலை நிர்வாகி ஆர்.கே..ஷர்மா ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிங்கோணியா பசு பராமரிப்பு மையத்தில் பசுக்கள் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்து ஹரியானாவை மையமாக கொண்டு செயல்படும் பசு பாதுகாவலர் குழுவில் ஒருவரான கோபால் தாஸ் என்பவர் தலைமையில் மெழுவர்த்தி ஏந்தி ஜெய்ப்பூரில் சிலர் ஊர்வலம் சென்றனர்.

Comments are closed.