ஜமாத்தே இஸ்லாமி மூத்த தலைவரை தூக்கிலிட்ட பங்களாதேஷ்:தூதரை திரும்ப பெற்ற துருக்கி

0

பங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமி கட்சியின் மூத்த அறிஞர் மோத்தியூர் ரஹ்மான் நிஜாமி பங்களாதேஷ் சிறையில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளார். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இருந்து பங்களாதேஷ் பிரிவதற்கு காரணமாக இருந்த சுதந்திரப்போரின் போது போர் குற்றங்கள் புரிந்தார் என்று கூறி நிஜாமியை தூக்கில் இட்டுள்ளது பங்களாதேஷ் அரசாங்கம்.

டாக்கா மத்திய சிறையில் மே 11 அன்று இரவு 12 மணிக்கு பின்னர் இவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆர்வலர்கள் பங்களாதேஷ் அரசு, ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தை சேர்ந்தவர்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறது என்றும் அவர்கள் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

இதனை அடுத்து துருக்கி பங்களாதேஷுக்கான தனது தூதரை திரும்பப் பெற்றுள்ளது. சர்வதேச மனித உரிமை குழுக்கள் மோத்தியூர் ரஹ்மான் நிஜாமியை பங்களாதேஷ நீதிமன்றம் விசாரணை செய்தது சர்வதேச தரத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. துருக்கியில் இவரின் மரண தண்டனையை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஷ் அரசு, தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு பங்களாதேஷில் இந்த தீர்ப்புக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Comments are closed.