ஜம்மு-கஷ்மீர் எம்.எல்.ஏ மீது கறுப்பு மை வீச்சு!

0

 

புதுடெல்லி:சுரேந்திர குல்கர்னி மீது சிவசேனா குண்டர்கள் நடத்திய கறுப்பு மை தாக்குதலின் பரபரப்பு அடங்கு முன்னர் டெல்லியில் ஜம்மு-கஷ்மீர் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ எஞ்சினீயர் ராஷித் மீது இந்துத்துவா குண்டர்கள் கறுப்பு மை மற்றும் ஆயில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு இந்து சேனா என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
கஷ்மீரின் உதம்பூரில் மூன்று பசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 தினங்களுக்கு முன்பாக நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் காயமுற்று நேற்று மரணமடைந்த ஷாஹித் அஹ்மதின் சகோதரரும், இதர 3 நபர்களும் எம்.எல்.ஏயுடன் இருந்தனர்.இவர்கள் மீதும் கறுப்பு மை வீசப்பட்டது.
இதுக்குறித்து ராஷித் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,’பாகிஸ்தானில் தாலிபானிசம் குறித்து எல்லோரும் பேசுகிறோம்.ஆனால், இந்தியாவில் என்ன நடக்கிறது?இவர்களெல்லாம் மன நோயாளிகள்.80 ஆயிரம் கஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.என் மீது கறுப்பு மையை வீசியதால் எதுவும் மாறிவிடப்போவதில்லைஎன்றார்.
ஏற்கனவே கஷ்மீர் சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏக்களால் ராஷித் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.