ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு திட்டமா?

0

ஜம்மு காஷ்மீரை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மோடி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க ஐம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.

அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் நேற்று வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதால் காஷ்மீர் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

Comments are closed.