ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த விடமாட்டோம்: மலேசிய பிரதமர் மகாதிர் உறுதி

0

மும்பையை சேர்ந்த ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்’ நிறுவனர் ஜாகீர் நாயக். இவர் பிற மதத்தினருக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டி வருவதாக மத்திய அரசு அவதூறு பரப்பி பல்வேறு குற்றச்சாட்டுகளில் முன்வைத்து இவருக்கு தடை விதித்தது.

இதனால் 2016 ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவுக்கு சென்றார். அங்கு நிரந்தரமாக குடியுரிமையும் பெற்று  வசித்து வருகிறார். மேலும் இவரது பணம் முழுவதும் கறுப்புப் பணம் என்னும் குற்றாச்சாட்டுக்களை கிளப்பியது மத்திய அரசு.

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ”இந்தியாவில் நியாயமான விசாரணை நடைபெறாது என ஜாகீர் நாயக் கருதுகிறார். எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம். அதற்கான உரிமை மலேசியாவுக்கு உள்ளது” என அந்நாட்டு அதிபர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.

Comments are closed.