ஜாட் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு ஹரியானா சட்டசபையில் நிறைவேற்றம்

0

பா.ஜ.க ஆளும் ஹரியானாவில் ஜாட் இன மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி வன்முறையில் ஈடுபட்டத்தில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர், 320 பேர் படுகாயமுற்றனர். இந்த வன்முறை சம்பவங்களின் போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் பல பெண்களும் போராட்டக்காரர்களால் கற்பழிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

தற்பொழுது ஹரியான சட்டசபையில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜாட் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை ஹரியான அரசு தாக்கல் செய்திருந்தது. OBC பிரிவின் கீழ் ஜாட் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அந்த மசோதா முழு மனதாக நிறைவேற்றப்பட்டது. இன்னும் இந்த மசோதாவை அரசியலமைப்பு சட்டத்தின் 9ஆவது பிரிவில் சேர்க்கும் படி மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் நீதி மன்றம் மூலம் இந்த இட ஒதுக்கீட்டுக்கு வரும் எதிர்ப்புகளை தவிர்க்கலாம்.

ஆனால் ஹரியானா அரசின் இந்த முடிவை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் இது சட்டத்திற்குட்பட்டதா என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன. ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு சென்ற UPA அரசாங்கம் ஜாட் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முன் வந்ததை உச்ச நீதி மன்றம் தடை செய்திருந்தது.

இன்னும் ஹரியானாவில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களாக ஜாட் இன மக்கள் இருகின்றார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பல காலமாக இட ஒதுக்கீடு கேட்டு சட்டபூர்வமாக ஜனநாயக முறையில் போராட்டம் செய்பவர்களுக்கு கிடைக்காத இட ஒதுக்கீடு வன்முறை பாதையில் சென்று கேட்பவர்களுக்கு உடனே வழங்கப்படுவது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ஜாட்

Comments are closed.