ஜார்கண்டிலும் காலூன்றியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0

நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு ஜனநாயக ரீதியில் கடுமையான முயற்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 12 அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் தனது நிர்வாக அமைப்பை பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. ஜனநாயகம் மற்றும் சிறுபான்மையினர் உரிமை மாநாடு நேற்று ஜார்கண்டில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொடியை மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலான ஹன்ஸலா ஷேக்கிடம் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் வழங்கினார்.
‘சிறுபான்மையினர், தலித்கள், ஆதிவாசிகள் என பலஹீனமான சமூகங்கள் நாட்டில் ஒதுக்கப்படுவதாகவும் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு இந்த சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும்’ என்று தேசிய தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
யுனைடட் கிறிஸ்டியன் ஃபோரத்தின் அருட்தந்தை சிலோமினஸ், எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு வங்க தலைவர் ஷஹாபுதீன், ஜார்கண்ட் இண்டர்நேஷனல் லீக் ஆஃப் இஸ்லாமிக் ஸ்காலர்ஸ் செயலாளர் அஃதப் ஆலம் நத்வி, எஸ்டிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஷஃபி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் மௌலானா காலித் ரஷாதி மற்றும் மதரஸா இஸ்லாமியாவின் டைரக்டர் ஜியாவுல் ஹக் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்கம் தங்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளதாக மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 11 அன்று அண்டை மாநிலமான பீகாரில் பாப்புலர் ஃப்ரண்ட் தனது மாநில குழுவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.