ஜார்கண்டில் இயக்கத்திற்கு எதிரான தடையை திரும்பப்பெறும் உயர் நீதிமன்ற உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட்

0

பத்திரிகை செய்தி

ஜார்கண்டில் இயக்கத்திற்கு எதிரான தடையை திரும்பப்பெறும் உயர் நீதிமன்ற உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்றுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இயக்கத்துடைய செயல்பாடுகளை தடை செய்யும் ஜார்கண்ட் மாநில அரசின் முடிவை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்
திரும்பப்பெற்றுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் வரவேற்றுள்ளார்.

“இயக்கத்தை தடை செய்த ஜார்கண்ட் பாஜக அரசின் மதவாத மற்றும் ஃபாஸிச செயல்திட்டத்தை உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது” என்று அவர் கூறியள்ளார். மேலும் ஒரு இயக்கத்தை தடை செய்ய குற்றவியல் திருத்தம் சட்டம் பிரிவு 16-ன் கீழ் வரும் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை உயர் நீதிமன்றம் சுட்டி காண்பித்ததன் மூலம் மாநில அரசின் ஜனநாயக விரோத நோக்கங்களை
வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 மற்றும் இயற்கை நீதிக்கான கோட்பாடுகளை அரசுடைய தடை அறிவிப்பு மீறியுள்ளது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தன்னுடைய முடிவை நியாயப்படுத்தும் எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் அரசு தோல்வி அடைந்துள்ளதை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது, எதிர்ப்பு குரல்கள் மற்றும் மக்கள் இயக்கங்களுக்கு எதிரான மாநில அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு கிடைத்த பின்னடைவாகும்.

நீதிபதி ராங்கோன் முகோபாத்யாய் அவர்களுடைய தீர்ப்பானது அரசியலமைப்பு தத்துவத்தை உறுதி செய்துள்ளதாக அமைந்துள்ளது; மேலும், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசத்தில் இயக்க செயல்பாடுகளுக்கான சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இது அமைந்துள்ளது.” என்றும் தமது அறிக்கையில் தேசிய தலைவர் E.அபுபக்கர் கூறியுள்ளார்.

இப்படிக்கு
டாக்டர் முஹம்மது ஷம்மூன்,
மக்கள் தொடர்பு அதிகாரி,
தலைமையகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

Comments are closed.