ஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த இந்துத்துவா கும்பல்!

0

ஜார்கண்ட்: ஹர்ஷவான் மாவட்டத்தில் டப்ரெஷ் அன்சாரி என்ற 24 வயது இளைஞர் மீது இந்துத்துவாவினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரும், இந்துத்துவா போன்ற மதவாத கும்பல் இஸ்லாமியர்கள் மீது கொடூரத் தாக்குதலுக்கு நடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி டப்ரெஷ் அன்சாரி என்ற இளைஞர் மீது இந்த்துதுவா கும்பல், ”ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்” என கூறச்சொல்லி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் மயக்கமடைந்த அன்சாரி மருத்துவமையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடந்த போது சுற்றியிருந்தபொது மக்கள் தாக்குதலுக்கு ஆளான இளைஞனை காப்பாற்றாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.