ஜார்கண்ட்: அலிமுதீன் அன்சாரி கொலை வழக்கு குற்றவாளி ஒருவர் மின்சாரம் தாக்கி மரணம்

0

ஜார்கண்ட்: அலிமுதீன் அன்சாரி கொலை வழக்கு குற்றவாளி ஒருவர் மின்சாரம் தாக்கி மரணம்

ஜார்கண்ட் மாநிலத்தில் பசு கடத்தலில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தி அலிமுதீன் அன்சாரி அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த கொலை செய்த 11 நபர்களில் ஒருவரான சிகந்தர் ராம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை தேங்கியிருந்த மழை நீரில் கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற போது ராம் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இன்னிக்ழ்வை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராம்கார்க் நகர காவல்துறை அதிகாரி ராமின் மரணத்தை உறுதி செய்துள்ளார். இறந்த சிக்காந்தர் ராமின் உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பியுள்ளனர்.

துண்டிகிக்கப்பட்ட நிலையில் கிடந்த மின்சார கம்பி மழை நீரில் மின்சாரம் கசியச் செய்ததால் இந்த மரணம் ஏற்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலிமுதீன் கொலை வழக்கில் மொத்தம் 17 நபர்களின் மேல் புகாரளிக்கப்பட்டு அதில் 12 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட 11 நபர்களில் 8 பேருக்கு ஜார்கண்ட் உயர் நீக்டிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் பிணை வழங்கியதால் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி சிறையில் இருந்து சிக்கந்தர் வெளிவந்தார். இவ்வழக்கில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஹசாரிபாக் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவை சந்திக்க சென்ற போது குற்றவாளிகளுக்கு அவர் மாலை அணிவித்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

 

Comments are closed.