ஜார்கண்ட் அலிமுதீன் கொலை வழக்கில் பாஜக ABVP குண்டர்கள் கைது

0

ஜார்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டத்தை சேர்ந்த அலிமுதீன் என்பவரை அவர்  மாட்டிறைச்சி கடத்தினார் என்று கூறி ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது. அவரது வாகனமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் ABVP  மற்றும் பாஜக வை சேர்ந்தவர்களை காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.

ராம்கார்க் பகுதி பாஜக உறுப்பினரான நித்யானந் மஹ்தோ மற்றும் அப்பகுதி ABVP உறுப்பினரான ராஜேஷ் தாகூர் ஆகியோர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடம் மேலும் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

அலிமுதீன் கொலை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 12  பெயர்களில் மஹ்தோவின் பெயர் தொடக்கத்தில் இருந்தே இடம்பெற்றிருந்தாலும் இந்த கொலையில் தாகூரின் பங்கு காவல்துறை விசாரணைக்குப் பின் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த இருவரும் தங்களுக்கும் இந்த கொலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் ABVP மற்றும் பாஜகவினருடன் பஜ்ரங்தள் அமைப்பினருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அலிமுதீனின் கொலையை விசாரிக்க கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு விசாரணை குழு சோட்டு வர்மா என்ற ராம்கார்க் பகுதி பஜ்ரங்தள் அமைப்பு தலைவரை இந்த வழக்கு தொடர்பாக தேடி வருகிறது. அலிமுதீன் என்ற அன்சாரியை கொல்வதன் மூலம் மாட்டிறைச்சி உண்ணும் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பசு பாதுகாவல் குண்டர்கள் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் முடிவு செய்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.