ஜார்கண்ட்: பசுவின் பெயரால் படுகொலைகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஊர்வலத்தில் காவல்துறை தடியடி

0

ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியாக பசு பயங்கரவாதிகளால் அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் வாட்ஸ்அப் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு செய்திகளை பாஜக தலைவர் ஒருவர் பரப்பியதை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஊர்வலத்தில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் பாகூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தடியடியில் பொதுமக்கள் பலர் காயமுற்றுள்ளனர். ஜூலை 5 ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் முன்நூற்றுக்கும்ம் மேற்பட்டோர் காந்தி சவுக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வாட்ஸ்அப் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான விஷ கருத்துக்களை பரப்பி வரும் பாஜக தலைவர் ஹிஸாபி ராய்-யை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் பசு பாதுகாவல் என்கிற பெயரில் அப்பாவி மக்கள் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் கொலை செய்யப்படுவதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டம் காவல்துறையின் அனுமதியின்றி நடத்தப்பட்டது என்று கூறி காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 60 பேர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிகளுக்கு எதிராக வெறுப்பை பரப்பிவரும் பாஜக தலைவர் ஹிஸாபி ராய் குறித்து கருத்து கேட்கப்பட்ட போது அது போலியான தகவல் என்றும் அவர் அனுப்பியதாக கூறப்படும் செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் போலியானவை என்றும் இதற்கும் ஹிஸாபி ராய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பசுவின் பெயரால் அப்பாவிகள் கொலை செய்யப்படுவதை தடுக்க இயலாத காவல்துறை அதனை எதிர்த்து போராடும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பது அவர்களின் பாஜக ஆதரவு நிலைபாட்டை காட்டுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுள்ளது. பொதுவாக அமைதியான பகுதியாக கருதப்படும் பாகூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் மாடுகளை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.