ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 4 பேர் அடித்துக் கொலை!

0
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள கும்லா எனும் கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் மாந்திரீக செயல்களில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின.
இதனையடுத்து நேற்று அதிகாலை பழங்குடியின மக்களின் வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்களை வெளியே இழுத்து வந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பாக்னி தேவி, பிரி தேவி, சூனா ஓரான் மற்றும் சாப்பா பகத் என்னும் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்ரனர்.
இதுக்குறித்து போலிஸார் கூறுகையில்: “மாந்திரிக செயல்களால் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி 12 பேரை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக” தெரிவித்தனர்.

Comments are closed.