ஜாலியன் வாலாபாக்

0

ஜாலியன் வாலாபாக்

15.3.1919

மூல்டானில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆதரவில் டெல்லி கேட்டுக்கு வெளிப்புறத்தில் பௌலிசேது குமாரதாஸ் எனுமிடத்தில் ரௌலட் மசோதாவைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

டாக்டர் சைபுதீன் கிச்சலு

அமிர்தசரஸலிருந்து டாக்டர் சைபுதீன் கிச்சலு லாகூரிலிருந்து தூனி சந்திரர், மோஸன்ஷா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். சுய ஆட்சி வேண்டுமென்றும், ரௌலட் மசோதவைக் கண்டித்தும் வீராவேசமாகப் பேசினார்கள்.

16.3.1919

மூல்டான் காலாமண்டியில் ரௌலட் மசோதா எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. டாக்டர் சைபுதீன் கிச்சலு, தூனிசந்திரர், மோஸன்ஷா ஆகியோர் வெகு எழுச்சியுடன் உரையாற்றினார்கள்.

18.3.1919

இதற்கிடையில் 18.3.1919 இல் ரௌலட் மசோதா சட்டமாக்கப்பட்டது.

20.3.2019

இந்தச் சூழ்நிலையில் தற்கால அரசியல் நிலைமையைப் பற்றி ஆராய காங்கிரஸ் கமிட்டியின் ரகசியக் கூட்டம் லியல்பூரில் நடைபெற்றது. 21.3.1919 இல் அமிருதசரஸ் ‘வாக்த்’ எனும் பத்திரிகையில் ரௌலட் சட்ட சம்பந்தமான புகைப்படம் வெளியாயிற்று.

அண்ணல் காந்தியடிகள்

ரௌலட் மசோதாக்கள் தயாரிக்கப்படும்போது காந்தியடிகள் சபர்மதி ஆசிரமத்தில் உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்தார். அவருக்கு ஆசனவாய்க் கோளாறுக்கு வெற்றிகரமாக ரண சிகிச்சை முடிந்திருந்த வேளை அது.

ரௌலட் கமிட்டியின் அறிக்கையை தற்செயலாகப் பத்திரிகையில் படிக்கிறார் காந்தி. அந்த அறிக்கைகள் அப்போதுதான் வெளியாகியிருந்தன. அக்கமிட்டியின் சிபாரிசுகள் என்னைத் திடுக்குறச் செய்தன என்கிறார் காந்தி.

மி லீணீஜீஜீமீஸீமீபீ நீணீsuணீறீறீஹ் tஷீ க்ஷீமீணீபீ வீஸீ tலீமீ றிணீஜீமீக்ஷீs tலீமீ ஸிஷீஷ்றீணீtt நீஷீனீனீவீtமீமீ’s க்ஷீமீஜீஷீக்ஷீt ஷ்லீவீநீலீ லீணீபீ ழீust தீமீமீஸீ றிuதீறீவீsலீமீபீ. மிts க்ஷீமீநீஷீனீனீமீஸீபீணீtவீஷீஸீs stணீக்ஷீtறீமீபீ னீமீ.*

( *வி.ரி.நிணீஸீபீலீவீ, கிஸீ கிutஷீதீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீக்ஷீ tலீமீ stஷீக்ஷீஹ் ஷீயீ னீஹ் மீஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீts ஷ்வீtலீ tக்ஷீutலீ, கிலீனீமீபீணீதீணீபீ மிமீபீவீtவீஷீஸீ 1927, ஸிமீஜீக்ஷீவீஸீt யிணீஸீuணீக்ஷீஹ் 2006 றிணீரீமீ 419.

சங்கரலால் பாங்கரும், உமர்சோபானியும் காந்தியைச் சந்தித்தனர். ரௌலட் விஷயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வற்புறுத்தினர். சபர்மதி ஆசிரமத்தில் கூட்டம் நடைபெற்றது. இருபதுக்கும் குறைவானவர்களே அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கவிக்குயில் சரோஜினி நாயுடு, ஹார்னிமன், உமர்சோபானி, சங்கரலால் பாங்கர், அனுசூயா, வல்லபாய் படேல் ஆகியோர் பங்கேற்றவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

சத்தியாக்கிரக சபை

பம்பாயில் சத்தியாக்கிரக சபை (ஷிணீtலீணீரீக்ஷீணீலீணீ ஷிணீதீலீணீ) அமைக்கப்பட்டது. சத்தியாக்கிரக சூளுரை (ஷிணீtஹ்ணீரீக்ஷீணீலீணீ றிறீமீபீரீமீ) தயாரிக்கப்பட்டது.  ரௌலட் சட்டத்திற்கு எதிரான களப்போராட்டம் துவக்கப்பட்டது. பிற மாகாணங்களிலும் சத்தியாகிரக சபையின் கிளைகள் துவக்கப்பட்டன. 1919 மார்ச் 30 ஆம் நாளை அவமதிப்பு நாளாகக் (ஷிணீtலீஹ்ணீரீக்ஷீணீலீணீ ஞிணீஹ் ஷீயீ பிuனீவீறீவீணீtவீஷீஸீ) அனுஷ்டிக்க முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

23.3.1919

சத்தியாக்கிரக இயக்கத்தை ஆதரித்திட அமிருதசரஸில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. டாக்டர் சத்தியபாலரும் டாக்டர் சைபுதீன் கிச்சலும் பங்கேற்றனர்.

29.3.1919

அமிருதசரஸில் பொதுக்கூட்டம் கூடியது. அதில் 30.3.1919 முழு கடை அடைப்பு ஹர்த்தால் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசவிடாமல் டாக்டர் சத்தியபாலர் தடுக்கப்பட்டார்.

பெரோஸபூர் மாவட்டத்தில் பசில்காவில் சுவாமி பரமானந்தரும் ஆரிய சமாஜத்தவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மறுநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்க முடிவெடுக்கப்பட்டது.

ஜாங் ஜில்லாவில், மக்யானாவில் ஒரு வழக்கறிஞரின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மறுநாள் நடக்க இருக்கும் ஹர்த்தால் பற்றி விவாதிக்கப்பட்டது.

ஹிந்து – முஸ்லிம் பஞ்சாயத்தார்

மூல்டான் மாவட்டத்தில் ஹிந்து, முஸ்லிம் பஞ்சாயத்தார் ஆதரவின் கீழ் 29.3.1919 இல் கூட்டம் நடைபெற்றது. காந்தியின் கட்டளையை ஏற்று ரௌலட் மசோதா கண்டன நாள் முழு அடைப்பாக கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

மூல்டான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கூட்டுக் காரியதரிசிகளின் கையெழுத்திட்ட அச்சிட்ட அறிக்கை வெளியானது. 30.3.1919 அன்று ஹர்த்தால் வெற்றிகரமாக நடத்தப்பட அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு காந்தியடிகள் 20 தடவைகள் (1896 முதல் 1946 வரை) வந்து சென்றுள்ளார். அண்ணலின் ஐந்தாம் வருகை 18.3.1919 முதல் 30.3.1919 வரை; விடுதலை இயக்கப் பணிகளை ஊக்குவித்தல் மற்றும் தென்னாப்பிரிக்க தியாகிகள் குடும்பத்தினரைச் சந்தித்தல், கிலாபத் இயக்கம் சம்பந்தமான சுற்றுப்பயணம் அது.

(சு.சிவலிங்கம், அ.அண்ணாமலை, கி.மோகன், தமிழர் தமிழ்நாடு காந்தி, சென்னை & 2007, பக்கம் 27.)

ராஜாஜி

1919 ஜனவரி பிற்பகுதியில் ராஜாஜி சென்னையில் குடியேறினார். 18.3.1919 காந்தி, மகாதேவ தேசாயுடன் சென்னை வந்தார். ரௌலட் மசோதா சட்டமானதாக செய்தி வந்தது. ரௌலட் கமிட்டி ஆவணங்களை ஆய்வு செய்ததில் நாடெங்கும் சிறையில் இருந்த 800 பேர்களில் ஆறு பேர்களை மட்டுமே விடுவித்திட வழி செய்தது.

(பி.பி.ஞிஷீபீஷ்மீறீறீ, ஜிலீமீ சிணீனீதீக்ஷீவீபீரீமீ பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ மிஸீபீவீணீ, க்ஷிஷீறீuனீமீ க்ஷிமி 1932, சிணீனீதீக்ஷீவீபீரீமீ, றிணீரீமீ 586.)

காங்கிரஸ் ரௌலட் கமிட்டியின் தீர்மானங்களை ஏற்கனவே கண்டித்திருந்தது.(ஜீணீரீமீ 586, சிஷீஸீரீக்ஷீமீss ஸிமீஜீஷீக்ஷீt, ஞிமீறீலீவீ, 1919, றிணீரீமீ 100) என்றாலும் ரௌலட் மசோதா 18.3.1919 இல் சட்டமானது.

வீரத்தலைவர் வ.உ.சி.

தேசபக்தச் செம்மல் ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுதந்திரச் சங்க நாதம் சுப்பிரமணிய சிவா இருவரும் 1915 இல் காந்தியடிகள் சென்னை வந்தபோது ஒதுங்கியேயிருந்தனர். ரௌலட் சட்டத்தை காந்தி தீவிரமாக எதிர்க்கிறார் என்பதை அறிந்த வ.உ.சி, சத்தியாக்கிரக சபையை ஆதரித்து, சென்னை திருவல்லிக்கேணியில் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் ரௌலட் சட்டத்தை கண்டித்து வீர உரை தந்தார்.

(ம.பொ.சி. விடுதலைப் போரில் தமிழகம், முதல் தொகுதி, சென்னை, 1982, பக்கம் 441.)

10.3.1919 ஹிந்து இதழ்

வ.உ.சி.யின் உரையை 10.3.1919 ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

‘‘மிருக சக்தியைப் பெருக்குவதில் மேற்கு நாட்டார் திறமைசாலிகள். இந்த மிருக சக்திக்கும் ஆன்ம சக்திக்கும் நடைபெறும் இந்தப் போரில் ஆன்மசக்தி வெற்றி பெறுவது உறுதி. நாட்டின் உண்மையான பக்தர்கள் யார் என்பதை இனங்கண்டு கொள்வதற்கு இதுவே தகுந்த தருணமாகும். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்தியா முழுவதும் சாத்விக எதிர்ப்பை மேற்கொள்வதற்கும் இதுவே காலமாகும். சாத்விக எதிர்ப்பில் நாம் உறுதியாக இருந்தால் அது நாம் சுயாட்சி பெறுவதற்கு நிச்சம் உதவும்’’ என்றார் வ.உ.சி.

(அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, சென்னை, 1969, பக்கம் 232.)

தமழ்நாட்டில் தீவிரமாக ரௌலட் சட்டமசோதாவை எதிர்த்ததும் வரலாறு; துரோகமும் உடனிருந்ததும் சரித்திரம் ஆகும்.

தொடரும்

Comments are closed.