ஜித்தா இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் நடத்திய சகோதரத்துவ சங்கமம்

0

 

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்திய பணியாளர்களுக்கு மத்தியில் தன்னலமற்ற சேவைகள் பல ஆற்றி வருகின்றது . அத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றது.
கடந்த 08.05.2015 அன்று ”சகோதரத்துவ சங்கமம்’ என்ற நிகழ்ச்சி தமிழ் இஸ்லாமிய மக்களை ஒன்றிணைக்கும் பொருட்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மேற்கு மாகாண இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் தமிழ்ப் பிரிவு மற்றும் யுனிவர்சல் இன்ஸ்பெக்சன் கம்பெனி  இணைந்து நடத்தியது.
விளையாட்டு போட்டிகள், கிராஅத் போட்டி, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சங்கமம் புகைப்படக் கண்காட்சியை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் மேற்கு மாகாண தமிழ்ப் பிரிவு பொதுச் செயலாளர் நாஸர் கான் திறந்து வைத்தார். இந்தியாவில் இஸ்லாம், எங்களை கவர்ந்த இஸ்லாம், உலகத் தலைவர்களின் பார்வையில் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம், மக்களை சக்திப்படுத்தும் தளங்களில் முஸ்லிம்கள், ஹஜ் தன்னார்வப் பணிகளில் பிரடெர்னிடி ஃபோரம் என காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் கைவினைப் பொருட்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
சங்கமத்தின் முத்தாய்ப்பான மனமகிழ் குடும்பம் அமைப்பதற்கான ஆலோசனை கருத்தரங்கம் இந்தியா பிரடெர்னிடி ஃபோரத்தின் மேற்கு மாகாண தமிழ்ப் பிரிவு தலைவர் மஹ்பூப் ஷரீப் தலைமையில் யுனிவர்சல் இன்ஸ்பெக்சன் கம்பெனியின் தம்மாம் பகுதி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் குலாம் காதிர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக தவ்பிக் திருமறையின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியினை ஆரம்பம் செய்தார். அதனைத் தொடர்ந்து பிரடெர்னிடி ஃபோரத்தின் செயற்குழு உறுப்பினர் அல் அமான் வரவேற்புரை ஆற்றினார்.
பிரடெர்னிடி ஃபோரத்தின் தமிழ்ப் பிரிவு செயலாளர் சேக் அப்துல்லாஹ் ஃபோரத்தின் தன்னார்வ சேவைகளை சுருக்கமாக கோடிட்டு காட்டினார்;. சங்கமத்தின் சிறப்பு அழைப்பாளர் பிரடெர்னிடி ஃபோரத்தின் ரியாத் மாநில தமிழ்;ப் பிரிவு செயற்குழு உறுப்பினர் மவ்லவி ஷர்புத்தின் அல்தாபி; மனமகிழ் குடும்பம் எவ்வாறு அமைப்பது என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ்களுடன் நடைமுறை உதாரணங்களையும் தொட்டுக்காட்டி அழகுற விவரித்தார்.
தொடர்ந்து ஃபோரத்தின் தமிழ்ப் பிரிவு தலைவர் மஹ்பூப் ஷரீப் ‘சகோதரத்துவ சங்கமம் ஏன்?’ என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். அவர் தனதுரையில் தற்போது இந்தியாவில் முஸ்லிம்களுக்குண்டான பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் எடுத்துக் கூறினார். அதன் ஒரு பகுதியாக சமூகங்களை சக்திபடுத்த இது போன்ற சங்கமங்கள் நடத்தப்படுவதாக தெரிவத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியாக பிரடர்னிடி ஃபோரத்தின் உறுப்பினர்; ஜமீல்தீன்; நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் செயற்குழு உறுப்பினர்; அமீர் சுல்தான் நெறிபடுத்தினார்.
இச்சங்கமத்தில் 700-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Comments are closed.