ஜெய் ஷா சொத்து மதிப்பு உயர்வு குறித்து தி வயர் செய்தி வெளியிட குஜராத் உயர் நீதிமன்றம் தடை

0

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற ஒரு வருடத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு சுமார் 16000 மடங்கு அதிகரித்துள்ளது என்ற செய்தியை தி வயர் செய்தி தளம் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து அந்த தளம் இந்த செய்தியை வெளியிடுவதற்கு ஜெய் ஷா தரப்பில் நீதி மன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது.

இதனை எதிர்த்து தி வயர் செய்தி நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றமும், ஜெய் ஷா சொத்து மதிப்பு உயர்வு வழக்கு முடியும் வரை அது குறித்து தி வயர் தளம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செய்திகளையும் வெளியிடக்கூடாது என்ற விராசனை நீதிமன்றத்தின் தடையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து சித்தார்த் வரதராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், “பல்லாண்டு கால நீதி பரிபாலனத்திற்கு எதிராக விசாரணை நீதிமன்றம் தி வயர் செய்தி மீது விதித்த தடையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கும் இந்த தீர்ப்பை நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 டிசம்பர் மாதம் அகமதாபாத் சிவில் நீதிமன்றம் ஒன்று தி வயர் செய்தி மீதான விசாரணை நீதிமன்றத்தின் இந்த தடையை ரத்து செய்திருந்தது. மேலும் இந்த செய்தியில் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் என்ற சொற் பிரயோகத்தை தவிர்க்குமாறும் மற்றபடி தி வயர் அந்த செய்தியை வெளியிட முழு சுதந்திரம் உள்ளது என்று உத்தரவிட்டிருந்தது.

Comments are closed.