“ஜெய் ஸ்ரீராம்” கூறச் சொல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ-விடம் வம்பிழுத்த ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர்!

0
ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு வெளியில் அம்மாநில அமைச்சர், காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ-வை, “ஜெய் ஸ்ரீ ராம்” என கூறச்  சொல்லி வம்பிழித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் ஜார்கண்ட் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க.வை சேர்ந்த சி.பி.சிங் என்கிற அந்த ஜார்கண்ட் அமைச்சர், இர்ஃபான் அன்சாரி என்கிற எம்.எல்.ஏ-விடம், “உங்கள் முன்னோர் ராமர்தான். பாபர் அல்ல.” என்று கூறுகிறார். அப்படி சொல்லும் போது சிங், இர்ஃபான் அன்சாரியை வலுக்கட்டாயமாக வம்பிலிப்பது தெரிகிறது.

இதற்கு இர்ஃபான் எம்.எல்.ஏ, “ராமரின் பெயரைக் கெடுப்பதே நீங்கள் தான். நமக்கு வேண்டியதெல்லாம் வேலைவாய்ப்பு, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைகள் வசதிகள்தான். இது அல்ல” என்றார்.

உங்களின் முன்னோர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்னதை மறக்க வேண்டாம். தய்மூர், பாபர், கஜினி உள்ளிட்டவர்கள் உங்களின் முன்னோர்கள் அல்ல. உங்கள் முன்னோர்கள் ராமரின் பக்தர்கள்” சி.பி.சிங் என்றார் .

ஜார்கண்டில் அமைந்திருக்கும் பாஜக அரசின், நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.சிங். அவரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பதடதாக அம்மாநில பாஜக கருத்து கூறியுள்ளது.

Comments are closed.